என்னுடைய இலக்கில் வென்றுவிட்டேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: என்னுடைய இலக்கை நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழகம் தலை நிமிர்த்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசுகையில் தெரிவித்தார்.
கவர்னர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளித்தார். இந்த உரையை அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 2021ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 6வது முறையாக வெற்றி பெற்ற போது ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்கு கவலையும் இருந்தது. அதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்த பொறுப்பை நான் எப்படி செய்ய போகிறேன், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலை தான் எனக்கு இருந்தது.
ஓரவஞ்சனை
முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறையிலும் மிக மோசமான பின்னடைவை சந்தித்து, மோசமான நிலையை அடைந்து இருந்தது. அதை நாம் சரி செய்து ஆக வேண்டும். அடுத்து நமக்கு மேல இருக்க கூடிய மத்திய அரசு, அது ஒத்துழைக்காத ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த இரண்டு நெருக்கடியை எதிர்க்கொள்வது தான் எனது கவலைக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இடியாப்ப சிக்கலான சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம். அதனால் தான் நான் கவலை கொண்டவனாக இருந்தேன். இப்பொழுது 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
மிக மிக மகிழ்ச்சி
இன்னும் சொன்னால் நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்னுடைய இலக்கை நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழகம் தலை நிமிர்த்துவிட்டது. தமிழகம் மற்ற மாநிலங்களை விட அதிகம் வளர்ந்துவிட்டது.கோடிக்கணக்கான மக்களின் மனங்களிலும், முகங்களிலும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் நான் பார்க்கிறேன். நாங்கள் அமைக்க போகிற, திராவிட மாடல் 2.0 ஆட்சி எங்களது சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவுக்கு இருக்கும். என்னுடைய முதல் கையெழுத்தே மகளிர் விடியல் பயண திட்டம் தான். விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ.60 ஆயிரம் வரை சேமித்துள்ளனர்.
மாதாந்திர சீர்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிருக்கு ரூ.29 ஆயிரம் வழங்கி உள்ளோம். அந்த பெண்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என்று பெருமையோடு சொல்கிறார்கள். காலை உணவு திட்டம் மூலம் பள்ளி குழந்தைகள் சத்தான உணவை உண்டு வருகின்றனர். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தின்றுவிட்டேன்....
விவரம் யில்லாத ஆளாக இருக்கியே . நீயும் உன் குடும்பமும் மக்களை ஏமாற்றி அடைந்த இலக்கை இப்படியா சட்ட சபையில் சொல்வது. இதில் பெருமை வேறு. நான் இலக்கை அடைந்து விட்டேன் என்று. அப்போ இனியும் தமிழ் நாட்டில் திருட ஒன்றும் இல்லையா
இந்த ஐந்து வருசத்தில் செம த்தியா மக்கள் கல்லா கட்டிட்டாங்க...சந்தோசமாத்தானே இருப்பாங்க...
அதுதான் எங்களுக்கும் தெரியுமே.. மகனும், மருமகனும் அடித்த கொள்ளை. அப்புறம் இலக்கு நிறைவேறாதா என்ன..
எத்தனை லக்கங்கள் இலக்கு நிறைவேறியுள்ளது ஸ்டாலின்?
இலக்கா...எதில்...இப்ப இப்ப பெரம்பலூரில் போலீஸ் வாகணம் மீது வெடிகுண்டு வீச்சு..வெயிட் பண்ணுங்க எடப்பாடி அறிக்கை பின்னாடியே வரும்.
அடடே
ஆம் அவர் வென்றுவிட்டார். நீதிமன்றத்தை மீறி செயல்பட்டார். காவல் துறையை ஏவல் துறையாக மாற்றினார். அவருடைய ஆட்களை பணம் சம்பாதிக்கவிட்டார். லஞ்சத்தில் சிறை சென்றவருக்கு சால்வை போத்தி சாதனையாளராக்கினார். அவர் நினைத்தை அத்தனையும் செய்தார். அவர் உண்மையை தான் கூறுகிறார்.
எத்தனை லட்சம் கோடிகள்னு சொன்னா வரும் காலங்களில் நாங்களும் உங்கக்கூட்டத்துடன் சேர்ந்துக்குவோமே
இலக்கு போதை கஞ்சா டாஸ்மாக் கட்டப்பஞ்சாயத்து
இருக்கலாம், இவர் இவரின் இலக்கை எட்டியிருப்பார். அவரின் இலக்கு என்பது ஊழல், கொலைகள், கொள்ளைகள், ரவுடசம், கற்பழிப்புகள் மற்றும் போதை பொருள்கள் விற்பனை. இந்த இலக்கைகளை இவர் எட்டிவிட்டார். தமிழ் நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார்.மேலும்
-
அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல்; 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
-
இஸ்ரோவின் அடுத்த மெகா திட்டம்; விண்வெளி நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
-
அரசு ஊழியர்களுக்கு 3வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு; ஐகோர்ட் உத்தரவு
-
போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; கைதியை கொல்ல முயன்றதால் அதிர்ச்சி
-
கட்சியின் கொள்கையை ஒருபோதும் மீறவில்லை; சொல்கிறார் காங் எம்பி சசிதரூர்
-
திமுகவும், அதிமுகவும் வேறு வேறு கட்சியா; கேட்கிறார் சீமான்