திருக்காமேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா

வானுார்: பூத்துறை திருக்காமேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.

வானுார் அடுத்த பூத்துறை கோகிலாம்பிகை சமேத திருக்காமேஸ்வரர் கோவிலில் மூலக்கோல அம்மன், எல்லை பிடாரியம்மன், பக்த ஆஞ்சநேயர் மற்றும் அய்யனாரப்பன் ஆகிய சன்னதிகள் உள்ளது.

இக்கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 21ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. விழாவையொட்டி அன்று மாலை 5;00 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 9;00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 6;00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

நேற்று காலை 6;00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 9;00 மணிக்கு கடம் புறப்பாடாகி திருக்காமேஸ்வரர் விமான கலசத்திலும், தொடர்ந்து மூலக்கோல அம்மன், எல்லை பிடாரியம்மன், பக்த ஆஞ்சநேயர், அய்யனாரப்பன் சன்னதி கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக எல்லை பிடாரியம்மன், பக்த ஆஞ்சநேயர், அய்யனாரப்பன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிேஷக விழா நடந்தது. திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement