கிரைம் செய்திகள்...
லாரியில் பேட்டரி திருட்டு கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; நேற்று முன்தினம் இரவு அவரது 3 ஈச்சர் லாரிகளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நேற்று காலையில் பார்த்தபோது லாரியில் இருந்த 3 பேட்டரிகள் திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெண் மாயம் கள்ளக்குறிச்சி அடுத்த ஈய்யனுாரை சேர்ந்த பரமசிவம் மனைவி கலைச்செல்வி, 34; கருத்து வேறுபாடு காரணமாக கலைச்செல்வி கணவரை பிரிந்து கடந்த ஒரு ஆண்டாக பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 20ம் தேதி மருத்துவமனைக்கு சென்ற கலைச்செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
போலீசை தாக்கியவர் கைது செஞ்சி, சந்தைதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 38; இவர் நேற்று முன்தினம் செஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த ஏட்டு ஸ்ரீதரிடம் தனது வங்கிக் கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கி விட்டதாக கூறி, அதை நீக்கி தர வேண்டும் என புகார் செய்தவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்ரீதரை, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்தனர்.
சேலையில் தீ: மூதாட்டி பலி செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிற்றம்பலம் மனைவி நீலாம்பாள், 73; இவர் கடந்த 18ம் தேதி வீட்டில் விளக்கேற்றிய போது புடவையில் தீப்பிடித்து படுகாயம் அடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மனைவி மாயம்: கணவர் புகார் திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபேட்டையைச் சேர்ந்தவர் ராம்சுபாஷ் ,27; இவரது மனைவி உதயா, 23; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் உதயா, குழந்தையுடன் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். பொங்கல் கழித்து ஊருக்கு வருவதாக கூறியவர் வராததால், ராம்சுபாஷ் செஞ்சிக்கு வந்து விசாரித்தபோது அவர் குழந்தையுடன் காணாமல் போனது தெரியவந்தது. ராம்சுபாஷ் அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரளி விதை தின்று பெண் பலி அனந்தபுரம் அடுத்த உமையாள்புரத்தைச் சேர்ந்தவர் குப்பன் மகள் தவச்செல்வி, 26; திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்து விட்டார். தாய் வீட்டில் இருந்த தவசெல்விக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் அரளி விதையை அரைத்து குடித்தார். உடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மகள் மாயம்: தாய் புகார் ஈய்யனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி கலைச்செல்வி, 34; இவர், கடந்த 20ம் தேதி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் கலா அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெண்ணை காணவில்லை கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் கோகிலா, 20; பிளஸ் 2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தவரை கடந்த 22ம் தேதி அதிகாலை முதல் காணவில்லை. இது குறித்து கோகிலாவின் தாய் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு; கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு
-
'தொண்டர்களை தினமலர் படிக்க வைத்தேன்'
-
பெண் குழந்தைகள், கல்வி தினம்
-
இரண்டாவது விண்வெளி வீரர்
-
செங்கல் கட்டு வேலையில் உயர அடிப்படையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
-
படுக்கை அறை வடிவமைப்பில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!