பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க போனில் அழைப்பு

கோவை: பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காத கார்டு தாரர்களுக்கு, போன் செய்து வந்து வாங்கிச் செல்லுமாறு ரேஷன்கடை ஊழியர்கள் அழைக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில், 10.80 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, 3000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 41 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்கவில்லை.

பொங்கல் முடிந்த பின்னும், வாங்காதவர்களுக்கு பொங்கல் தொகுப்பு, பணத்துடன் வழங்க அரசு தரப்பில் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள், கார்டுதாரர்களை போன் செய்து வர சொல்கின்றனர்.

மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், ''பொங்கல் தொகுப்பு வாங்காமல் விடுபட்டவர்களுக்கு ஒரு வாரமாக வழங்கப் படுகிறது. வாங்காதவர்கள் எல்லோருக்கும் கிடைக்கும். எந்த தேதி வரை கொடுக்க வேண்டும் என, அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை,'' என்றார்.

Advertisement