சென்னை: புகார்பெட்டி; சிக்னல் நேரத்தில் குளறுபடி விபத்தில் சிக்கும் வாகனங்கள்

வேளச்சேரி குருநானக் கல்லுாரி சிக்னல், மூன்று சந்திப்புகளுக்கு வழிகாட்டுகிறது. கிண்டியில் இருந்து, நுாறடி சாலை மற்றும் காந்தி நகர் நோக்கி செல்ல பச்சை சிக்னல் எரியும்.

அடுத்து காந்தி நகரில் இருந்து கிண்டி நோக்கி செல்ல, 30 நொடி சிக்னல் எரிந்து முடிந்துவிடும். அதன் பின் கிண்டியில் இருந்து நுாறடி சாலை நோக்கி செல்ல பச்சை விளக்கு எரியும் என, வாகன ஓட்டிகள் தயாராக இருப்பர். ஆனால், காந்தி நகர் நோக்கி செல்ல சிக்னல் விழும். இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

நுாறடி சாலையில் இருந்து காந்தி நகர் நோக்கி செல்ல, முந்தைய பச்சை விளக்கின் தொடர்ச்சியாக, 20 நொடிகள் நேரத்தை அமைத்தால், விபத்துகள் தவிர்க்கப்படும்.

- பாலகிருஷ்ணன், கிண்டி.

Advertisement