தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க

24


நமது நிருபர்




திருநெல்வேலியில் நேற்று பேட்டியளித்த தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, “தி.மு.க., கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது,” என்றார்.
இதையடுத்து, அந்த புதிய கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, 'ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள் என்ற கோரிக்கையில் காங்கிரஸ் விடாப்பிடியாக இருப்பதால், மாற்று வழிகளை தி.மு.க., தலைமை யோசிக்க துவங்கியுள்ளது.


'இதற்கிடையே, 20 தொகுதிகளை கேட்டு உறுதியாக இருந்த தே.மு.தி.க., தற்போது 10 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளது. ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்பதால் சிக்கல் நீடிக்கிறது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., விலகினால், தே.மு.தி.க., ராமதாசின் பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது.


கடந்த 2016ல் ஜெயலலிதா, சிறிய கட்சிகளோடு இணைந்து, அ.தி.மு.க.,வை தனித்தே போட்டியிட வைத்தார். அந்த மனநிலைக்கு தற்போது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வந்திருக்கிறார்' என்றார்.

Advertisement