சிவகாசி மாணவி தற்கொலை வழக்கில் கல்லுாரி முதல்வர், ஊழியர் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாணவி சோலை ராணி 19,தற்கொலை செய்த வழக்கில் கல்லுாரி முதல்வர் அசோக், அலுவலக உதவியாளர் மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி மகள் சோலைராணி 19, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் 2 ம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவில் ஆண் நண்பர் உடன் புகைப்படம் எடுத்ததால் கல்லுாரி முதல்வர் அசோக் , ஜன., 20ல் மாணவியின் தாயாரை கல்லுாரிக்கு வரவழைத்து கடிதம் எழுதிக் கொடுக்க கூறினார். அன்று இரவு மாணவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொ லைக்கு கல்லுாரி முதல்வர், அலுவலக உதவியாளர் மணிமாறன் தான் காரணம் எனக்கூறிய மாணவர்கள், அவர்களை கைது செய்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு கல்லுாரி முதல்வர் அசோக்கை கைது செய்த சிவகாசி டவுன் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை நீதிமன்ற ஜாமினில் விடுவித்தார். நேற்று அலுவலக உதவியாளர் மணிமாறன் கைது செய்யப்பட்டார்.

Advertisement