அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பேச்சு இறுதிக்கட்டம்; பியுஷ் கோயல் தகவல்
புதுடில்லி: ''அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பேச்சு இறுதிக் கட்டத்தில் உள்ளது'' என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு பியுஷ் கோயல் அளித்த பேட்டி: கடந்த காலத்திற்கும், இன்றைய காலத்திற்கு மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இந்தியா இன்றைக்கு மரியாதைக்குரிய நாடு. மக்கள் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நல்ல தலைமையை கொண்டுள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பேச்சு இறுதிக் கட்டத்தில் உள்ளது. நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
இருதரப்பினருக்கு திருப்தி அடைந்த பிறகு ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்படும். ஐரோப்பிய யூனியன் உடன் அருமையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஒப்பந்தமும் அதன் சொந்த காலில் நிற்கிறது. 2022ம் ஆண்டு பேச்சு தொடங்கியதில் இருந்து, உண்மையாகவும், தீவிரமாகவும் ஒப்பந்தம் மேற்கொள்ள அவர்கள் (ஐரோப்பிய யூனியன்) நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்தியாவின் திறமையை உலக நாடுகள் அங்கீகரிக்கிறது. இப்பொழுது இந்தியாவுடன் வணிகம் செய்யவும் விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்திய பொருளாதாரம் 2047ம் ஆண்டிற்குள் 30 டிரில்லியன் டாலராக வளர்ச்சி அடையும். உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தும் போது, எங்கள் தரம் மேம்படும். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.
அமெரிக்காவையே வளைத்த ஒருவர் ! இன்று தமிழ்நாட்டின் பா.ஜ. க தேர்தல் பொறுப்பாளர் ? சும்மா அதிருதுல்ல? எடப்பாடியார் விருப்பப் படி இவர் பெயரை சொன்ன உடனே எதிர் முகாம், உள் எதிரி முகாம் சும்மா அதிர்ந்திருக்கும்.....மேலும்
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் வாலிபர் கைது; தீவிர விசாரணை
-
ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்; தற்காலிகமாக ஒத்திவைப்பு
-
தொடர்ச்சியான முதலீடுகளால் அனைத்துப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சி: துணை ஜனாதிபதிசி.பி. ராதாகிருஷ்ணன்
-
ரிபாகினா புதிய சாம்பியன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலக்கல்
-
வாஷிங்டன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்
-
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ்-அரவிந்த் 'டிரா'