கவனிப்பாரின்றி அழியும் நிலையில் பழமையான பெகிலி சிவன் கோவில்

7

- நமது நிருபர் -



கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிக்கு அருகில் உள்ள பெகிலி என்ற ஊரில், 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிவன் கோவில், கவனிப்பாரின்றி அழியும் நிலையில் உள்ளது.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
1brகிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிக்கு அருகில் உள்ள பெகிலி என்ற ஊரில், காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான ஜெயலட்சுமி, கள ஆய்வு செய்ததில், 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில், இரண்டு நுாற்றாண்டுகளாக கவனிப்பாரற்று கிடப்பதை கண்டறிந்துள்ளார்.

ஆலமரம்



அவரது ஆய்வில், அது, 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து, அவர் கூறியதாவது:
'அடிக்கரடு' என்ற பொருளில், சிறுமலை குன்றின் அடிவாரத்தில் உள்ள ஊரான பெகிலியில், 200 ஆண்டு கால ஆலமரத்தின் கீழ், புதர் காடுகளால் மூடப்பட்ட நிலையில் இருந்த சிவன் கோவிலை கண்டோம்.

ஊர் மக்கள் மற்றும் கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார், முன்னாள் காப்பாட்சியர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி வரலாறு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உதவியுடன் சுத்தம் செய்து, கள ஆய்வு செய்த போது, அது, அழகான, சோழர் காலத்தைச் சேர்ந்த சிவன் கோவில் என்பதை அறிந்தேன்.



சோழர் காலத்தில், கிருஷ்ணகிரி பகுதி, 'நிகரிலி சோழ மண்டலம், விது கதழகிய நல்லுார்' என்னும் பெயர்களிலும், ஓசூர், 'முரசு நாடு' என்னும் பெயரிலும் வழங்கப்பட்டுள்ளன.அந்த வகையில், இந்த கோவில், சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்பதை, அதன் கட்டடக்கலை மற்றும் அழகிய சிற்பக்கலையின் வாயிலாக அறிய முடிகிறது. இது, முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்டு உள்ளது.

சிற்பி




இது, அதிட்டானம், பாதம், பிரஸ்தரம், கண்டப் பகுதிகள் மற்றும் ஐந்து கோஷ்டங்களுடன் மிக அழகாக, சிறந்த சிற்பிகளால் கட்டப்பட்டு உள்ளது. இதன் போதிகை என்ற அமைப்பு, முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்த, தனித்த பாணியை உடையது என்பதை அறிய முடிகிறது. அதாவது, இந்த கோவில், 900 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதை உறுதி செய்ய முடிகிறது.


கடந்த 200 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் புழக்கம் இல்லாத நிலையில், இந்த கோவில் கருவறையின் அடிப்பகுதி புதையலுக்காகத் தோண்டப்பட்டு, சிவலிங்கமும் திருடப்பட்டுள்ளதுடன், நந்தி சிலையும் உடைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு அருகிலேயே பாழடைந்த மிகப்பெரிய நீராழி மண்டபம் உள்ளது.

'பாண்டவக்குடி' என ஊர் மக்களால் அழைக்கப்படும் இப்பகுதிக்குள் நுழைய, ஊர் மக்கள் அஞ்சுகின்றனர். அதன் பின்னணி குறித்து அறிய முடியவில்லை. இந்த அழகிய கோவிலில் உள்ள மரங்களை அகற்றி, புதைந்துள்ள கட்டடப்பகுதிகளை மீட்டால், வரலாற்றுக்கு தேவையான கல்வெட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கிடைக்கும்; சிவனடியார்களுக்கும் பயனளிக்கும். தொல்லியல் துறையும், அறநிலையத் துறையும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement