எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் தக்க பதிலடி; அதிபர் டிரம்புக்கு ஈரான் பதில்

6


டெஹ்ரான்: ஈரான் தனக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் உடனடியாக தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார்.


மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே ஏற்கனவே பதற்றமான உறவு உள்ளது. இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்தார். போராட்டக்காரர்களை ஒடுக்கினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இத்துடன் நிற்காமல், போர் கப்பல்களை ஈரான் கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் அல்லது கடந்த முறை விட மோசமான ராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். தற்போது ஈரான் தனக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் உடனடியாக தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு 12 நாள் போரிலிருந்து அமெரிக்கா எங்களிடம் தக்க பாடங்கள கற்றுக்கொண்டது.



எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், எங்கள் அன்பான நிலம், வான் மற்றும் கடல் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் உடனடியாகவும், சக்திவாய்ந்ததாகவும் பதிலளிக்க தயாராக உள்ளன. அணுசக்தி தொழில்நுட்பத்திற்கான ஈரானின் உரிமைகளை உறுதி செய்தால் நியாயமான மற்றும் சமமான அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு சையத் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.

Advertisement