மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுங்கள்; எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை

15


புதுடில்லி: ''எம்.பி.,க்கள், மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும், மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் இடமாக பார்லிமென்ட் இருக்க வேண்டும்' என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:


* இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்பிக்கள் செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும்.


* மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் விதமாக பார்லிமென்ட் திகழ வேண்டும். எதிர்பார்ப்புகளை எம்பிக்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
* ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு எப்போதும் மத்திய அரசு தயாராகவே இருக்கிறது.

* பார்லிமென்ட் எம்பிக்கள் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

* ஜனாதிபதியின் உரை 140 கோடி மக்களின் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.

* ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

* விவசாயிகள், இளைஞர்கள், மீனவர்கள் இந்த ஒப்பந்தத்தால் பயன் அடைவார்கள்.

* நீண்ட கால பிரச்னை என்ற நிலை மாறி நீண்ட கால தீர்வு என்ற நிலையை எட்டி இருக்கிறோம்,

* 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.


* பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொண்டு நீண்ட கால வளர்ச்சிக்கு வழி வகுக்கிறோம்.

* தடைகளை தாண்டி, தீர்வுகளைக் காண வேண்டிய நேரம் வந்துவிட்டது.

* நலத்திட்ட உதவிகள் மக்களைச் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்கிறது.

* நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, ​​எங்கள் முன்னுரிமை எப்போதும் மனிதர்களை மையமாகக் கொண்டதாகவே இருக்கும்

* தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா மீதான நம்பிக்கை உலக அளவில் அதிகரித்துள்ளது.

* நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தனது தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார். இத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய நாட்டின் ஒரே பெண் நிதியமைச்சர் அவர்தான்.

* இது இந்திய ஜனநாயகத்தின் ஒரு மிகவும் பெருமைக்குரிய அத்தியாயம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Advertisement