அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

7

திப்ரூகர்; அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.

திப்ரூகரில் கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது;

அசாம் மக்களிடம் நான் கேட்கிறேன். இங்கு ஊருருவல்காரர்கள் இருக்க வேண்டுமா? அத்துமீறி நுழைபவர்கள் இருக்க வேண்டுமா? காங்கிரசானது அசாமை ஊடுருவல்காரர்களின் மையமாக மாற்றியது.

அதன் மூலம் வாக்கு வங்கியை உயர்த்தி, தமது அதிகாரத்தை பெற அதை ஆயுதமாகவும் பயன்படுத்தியது. இங்குள்ள புவியியல் அமைப்பை மாற்றும் முறையை தடுத்து நிறுத்திய முதல்வருக்கும், பாஜ அரசாங்கத்துக்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜ அரசானது, வங்கதேச ஊடுருவல்காரர்களிடம் இருந்து 1 லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை விடுவித்து உள்ளது. இந்த பணி அரசின் பணியாகும். ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் இங்கு 3வது முறையாக பாஜவை ஆட்சிக்கு கொண்டு வருவீர்கள் என்று நான் நம்பிக்கையுடன் கூறிக்கொள்கிறேன். இங்குள்ள ஒவ்பொரு ஊடுருவல்காரரையும் நான் வெளியேற்றுவேன்.

இவ்வாறு உள்துறை அமித் ஷா பேசினார்.

Advertisement