பிப்ரவரி 5ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வரும் சூழலில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிப்ரவரி 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.



தமிழக சட்டசபையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி 20ம் தேதி துவங்கியது. கவர்னர் ரவி உரை நிகழ்த்தி, முதல் கூட்டத்தை துவக்கி வைப்பார் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தன் உரையை துவங்கும் முன், தேசிய கீதம் இசைக் காததற்கு கவர்னர் அதிருப்தியை தெரிவித்தார். கவர்னர் ரவி, சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, அரசின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.


பின்னர் அனைத்து விவாதங்களும் நடந்து முடிந்த பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சட்டசபை கூட்டம், அடுத்த மாதம் நடக்க உள்ளது. அப்போது, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிப்ரவரி 13 அல்லது 14ம் தேதியில் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடக்க உள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement