அஜித் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவி: கட்சியினர் விருப்பம்

12


மும்பை: அஜித் பவார் மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி சுனேந்திராவை துணை முதல்வராக்க வேண்டும் என அக்கட்சி மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான நர்ஹாரி ஜிர்வால் கூறியுள்ளார்.


மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் நேற்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.


அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலஅமைச்சருமான நர்ஹரி ஜிர்வால்கூறியதாவது: அஜித் பவாரின் மனைவி சுனேந்திராவை, அமைச்சரவையில் இடம்பெற செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் எனக்கூறியுள்ளார்.


சுனேந்திரா தற்போது ராஜ்யசபா எம்பி ஆக உள்ள நிலையில், அவருடன் கட்சி மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், சகன் பஜ்பால், தனஞ்செய் முன்டே, சுனில் தத்கரே ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் பவாரின் மறைவு காரணமாக காலியாக உள்ள தொகுதியில் நடக்கும்இடைத்தேர்தலில் அவர் போட்டியிடக்கூடும் எனத் தெரிகிறது.

Advertisement