அவதுாறு வழக்கில் டில்லி கவர்னர் விடுவிக்கப்பட்டார்
புதுடில்லி: சமூக ஆர்வலர் மேதா பட்கர் தொடர்ந்த அவதுாறு வழக்கில் இருந்து, டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் மேதா பட்கர். சமூக ஆர்வலரான இவர், குஜராத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பான போராட்டங்களின்போது, அவதுாறாக பேசியதாக, மேதா பட்கர் மீது, அப்போது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்த தற்போதைய டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா வழக்கு தொடர்ந்தார்.
அதுபோல், சக்சேனாவுக்கு எதிராக மேதா பட்கர் வழக்கு தொடர்ந்தார்.
டில்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என, மேதா பட்கருக்கு எதிரான வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனாவுக்கு எதிரான வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும்
-
ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 201க்கு விற்பனை
-
காரில் தீப்பிடித்து எரிந்ததால் கோவை ரோட்டில் பரபரப்பு
-
கணக்கெடுப்பு நடத்த மா.கம்யூ.,கோரிக்கை
-
வண்ண ஓவியங்களால் மிளிரும் புது பஸ் ஸ்டாண்ட் சுவர்கள்
-
டிராக்டர் மீது அரசு பஸ் மோதி விபத்து; பெண் தொழிலாளி இறப்பு