வீட்டு வேலை செய்வோரை பாதுகாக்க கொள்கை: கோர்ட் அறிவுறுத்தல்

- டில்லி சிறப்பு நிருபர் -:

வீட்டு வேலை செய்வோர் உழைப்பை சுரண்டாமல், அவர்களை பாதுகாக்க தேவையான கொள்கைகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வீட்டு வேலை செய்வோரை பாதுகாக்க கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமர்வு கூறுகையில், 'இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு நாங்கள் நேரடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வீட்டு வேலை பார்க்கும் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலைத் தடுக்க, ஒவ்வொரு மாநிலமும் பொருத்தமான கொள்கைகளை உருவாக்க வேண்டும்' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement