நிபா வைரஸ் அச்சம்: சீன விமான நிலையங்களில் பயணிகளுக்குச் சோதனை

பீஜிங்: நிபா வைரஸ் பரவல் குறித்த அச்சம் காரணமாக, சீன விமான நிலையங்களில் பயணிகளுக்குப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

நிபா வைரஸ்,வவ்வால்கள் மூலம் பரவும் ஒரு வைரஸ்,பாதிக்கப்பட்ட விலங்குகள், அசுத்தமான உணவுகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மூளை வீக்கம் ஆகிய பாதிப்புக்கள் வரும்.

பீஜிங்கிற்கு வந்த சில இந்தியப் பயணிகள், தங்களுக்கு சளி மாதிரிப் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த சுகாதாரக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, சீன தேசிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியா உட்பட நிபா வைரஸ் பரவல் பதிவாகியுள்ள பகுதிகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளை, சீனா பரிசோதனை செய்ய தொடங்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் தற்போது மேற்குவங்கம் மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் முக்கியமாக நிகழ்கிறது. அந்த பகுதி எங்கள் எல்லையில் தொடர்பில் இல்லாத நிலையில்,சீனாவில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இவ்வாறு சீன தேசிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement