துாய்மை பணியாளரின் "தூய்மை" மனசு; கீழே கிடந்த மொபைல் போனை போலீசாரிடம் ஒப்படைத்ததற்கு குவிகிறது பாராட்டு
சென்னை: சாலையை சுத்தம் செய்யும்போது, கீழே கிடந்த மொபைல் போனை, துாய்மை பணியாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் உஷா, 42. அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டையில் துாய்மை பணி செய்கிறார். சைதாப்பேட்டை, மெட்ரோ ரயில் நிலையம் அருகில், சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, 25,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் சாலையில் கிடந்தது. மொபைல் போன் செயல்பாட்டில் இருந்ததால், அதில் உரிமையாளர் தொடர்பு கொள்வார் என, சில மணி நேரம் காத்திருந்தார்.
ஆனால், யாரும் தொடர்பு கொள்ளாததால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இவரின் நேர்மையை, போலீசார் மற்றும் சக ஊழியர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீட்டு வேலை செய்வோரை பாதுகாக்க கொள்கை: கோர்ட் அறிவுறுத்தல்
-
அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
-
அவதுாறு வழக்கில் டில்லி கவர்னர் விடுவிக்கப்பட்டார்
-
சந்தி சிரிக்கிறது சட்டம் - ஒழுங்கு
-
ராமதாசை கொண்டாடியவர்கள் எனக்கு துணை நிற்கவில்லை திருமாவளவன் ஆதங்கம்
-
ஆட்சியே சீக்கிரம் முடியப்போகுது கனவை சொல்லி என்ன பிரயோஜனம் கேள்விகளால் திணறடிக்கும் மக்கள்
Advertisement
Advertisement