வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு; இதுவரை 16.6 லட்சம் பேர் மனு: கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, இன்று வரை, 16.6 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர்.



தமிழகத்தில், ஏப்ரல் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதன்படி, வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள், கடந்த ஆண்டு நவம்பர் 4ல் துவங்கியது. டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 6.41 கோடி வாக்காளர்களில், 97.3 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருந்தனர்.


தற்போதைய நிலவரப்படி, 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கும், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் முறையிடுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இன்றைய நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, 16.6 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். முறையீடு தொடர்பாக, 1.30 லட்சம் பேர் மனுக்கள் அளித்துள்ளனர்.


வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு அவகாசம் நாளையுடன் நிறைவடைய இருந்தது. தி.மு.க., தொடர்ந்த வழக்கில், கால அவகாசத்தை மேலும் 10 நாட்கள் வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கால அவகாசம் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை, இந்திய தேர்தல் கமிஷன் நாளை ( ஜனவரி 30) வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement