மீண்டு வருகிறார் ஷூமாக்கர்

புதுடில்லி: மைக்கேல் ஷூமாக்கர் கோமாவில் இருந்து மீண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
ஜெர்மனி கார்பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் 57. 'பார்முலா-1' உலகில், 7 முறை சாம்பியன் ஆனவர். கடந்த 2013, டிச. 29ல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மனைவி கோரின்னாவுடன் 30, பிரான்ஸ் சென்றார். அங்குள்ள ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த அடிபட்டது.
இதனால் கோமா நிலைக்குச் சென்றார். மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக, தொடர்ந்து கோமா நிலையில் வைக்கப்பட்டு இருந்தார். இதன் பின் ஸ்பெயினின் மஜோர்கா, பிறகு, சுவிட்சர்லாந்தின் லேக் ஜெனிவாவில் உள்ள அவரது வீட்டில் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
சிகிச்சைக்காக ஒரு வாரத்துக்கு ரூ. 12.70 லட்சம் செலவு செய்யப்படுகின்றன. மனைவி, ஷூமாக்கர் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டு இவர் குறித்த போட்டோக்களை விற்க முயன்ற பணியாளர்களுக்கு தண்டனை கிடைத்தது. 2024ல் தனது மகள் கினா திருமணத்துக்கு வருவார் என வதந்தி பரவின.
இவரது மகன் மைக் ஷூமாக்கர் 26, கார்பந்திய வீரராக உள்ளார். இதனிடையே '13 ஆண்டுக்குப் பின் ஷூமாக்கர் உடலில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. 'வீல் சேரில்' அமர்ந்து, தனது பண்ணை வீட்டில் சுற்றி வருகிறார்,' என செய்தி வெளியாகியுள்ளன.

Advertisement