தமிழக பவுலர்கள் ஏமாற்றம் * ரஞ்சி கோப்பை போட்டியில்...
சேலம்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் ஏமாற்ற, முதல் நாள் முடிவில் பரோடா அணி, 247/5 ரன் எடுத்தது.
இந்தியாவில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசன் நடக்கிறது. 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று கடைசி சுற்று லீக் போட்டிகள் துவங்கின. தமிழகத்தின் சேலத்தில் துவங்கிய போட்டியில் தமிழகம், பரோடா அணிகள் ('ஏ' பிரிவு) மோதுகின்றன.
'டாஸ்' வென்ற பரோடா, பேட்டிங் செய்தது. பரோடா அணிக்கு ஜோத்னில் சிங் (10), ஷிவாலிக் (35) ஜோடி துவக்கம் கொடுத்தது. ஷாஷ்வத் (5), விஷ்ணு (9) விரைவில் திரும்பினர். அடுத்து இணைந்த சுகிர்ட், நினாத் (66) என இருவரும் அரைசதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் பரோடா அணி முதல் இன்னிங்சில் 247/5 ரன் எடுத்திருந்தது. சுகிர்ட் (73), கேப்டன் ஆதித் (45) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகத்தின் சார்பில் ஜெகனாதன் 3, சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
புதுச்சேரி அபாரம்
புதுச்சேரியில் நடக்கும் 'டி' பிரிவு போட்டியில் புதுச்சேரி, ராஜஸ்தான் மோதுகின்றன. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 168 ரன்னுக்கு சுருண்டது. புதுச்சேரியின் கரண் கண்ணன் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய புதுச்சேரி அணி முதல் இன்னிங்சில் 77/2 ரன் எடுத்து, 91 ரன் மட்டும் பின்தங்கி இருந்தது.
மும்பையில் நடக்கும் போட்டியில் டில்லி, மும்பை அணிகள் மோதுகின்றன. சனத் சங்வான் (118) சதம் அடிக்க, முதல் இன்னிங்சில் டில்லி அணி 221 ரன்னில் ஆல் அவுட்டானது. மோகித் 5 விக்கெட் சாய்த்தார். மும்பை அணி முதல் நாள் முடிவில் 13/1 ரன் எடுத்திருந்தது.
சிராஜ் 'நான்கு'
ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் சத்தீஷ்கர் அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முகமது சிராஜ் 4 விக்கெட் சாய்த்தார். ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 56/0 ரன் எடுத்து, 227 ரன் பின் தங்கி இருந்தது.
மேலும்
-
வீட்டு வேலை செய்வோரை பாதுகாக்க கொள்கை: கோர்ட் அறிவுறுத்தல்
-
அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
-
அவதுாறு வழக்கில் டில்லி கவர்னர் விடுவிக்கப்பட்டார்
-
சந்தி சிரிக்கிறது சட்டம் - ஒழுங்கு
-
ராமதாசை கொண்டாடியவர்கள் எனக்கு துணை நிற்கவில்லை திருமாவளவன் ஆதங்கம்
-
ஆட்சியே சீக்கிரம் முடியப்போகுது கனவை சொல்லி என்ன பிரயோஜனம் கேள்விகளால் திணறடிக்கும் மக்கள்