ரஞ்சி: தமிழக அணி அபாரம்

சேலம்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழகத்தின் விமல் குமார் அரைசதம் கடந்தார்.
சேலத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், பரோடா அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் பரோடா அணி, 247/5 ரன் எடுத்திருந்தது. சுகிர்த் (73), அதித் (45) அவுட்டாகாமல் இருந்தனர்.


இரண்டாம் நாள் ஆட்டத்தில் பரோடா அணிக்கு சுகிர்த் பாண்டே (84) கைகொடுத்தார். கேப்டன் அதித் ஷேத் (109) சதம் விளாசினார். பரோடா அணி முதல் இன்னிங்சில் 375 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் ஜெகநாதன் ஹேம்சுதேஷன் 6, சாய் கிஷோர் 4 விக்கெட் கைப்பற்றினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு அதிஷ், விமல் குமார் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய விமல் அரைசதம் விளாசினார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 118/0 ரன் எடுத்து, 257 ரன் பின்தங்கி இருந்தது. அதிஷ் (42), விமல் (66) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement