தாய்லாந்து பாட்மின்டன்: அரையிறுதியில் தேவிகா

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தேவிகா சிஹாக், தாய்லாந்தின் சுபானிடா கேட்டோங் மோதினர். தேவிகா 21-19, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் இஷாராணி, மலேசியாவின் வோங் லிங் சிங் மோதினர். இதில் இஷாராணி 21-18, 16-21, 13-21 என தோல்வியடைந்து வெளியேறினார்.


ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தருண், சீனாவின் சூ ஜுவான் சென் மோதினர். இதில் தருண் 11-21, 17-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.

Advertisement