உலக விளையாட்டு செய்திகள்
ஆஸ்டன் வில்லா வெற்றி
பர்மிங்ஹாம்: இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடந்த
ஐரோப்பா லீக் கோப்பை கிளப் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஆஸ்டன்
வில்லா (இங்கிலாந்து), ரெட் புல் சால்ஸ்பர்க் (ஆஸ்திரியா) அணிகள் மோதின.
இதில் ஆஸ்டன் வில்லா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லீக்
சுற்றில் விளையாடிய 8 போட்டியில், 7 வெற்றி, ஒரு தோல்வி என, 21
புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த ஆஸ்டன் வில்லா அணி 'நாக்-அவுட்' சுற்றுக்கு
முன்னேறியது
பஹ்ரைன் 'சாம்பியன்'
சபா அல்-சலேம்: குவைத்தில், ஆண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 22வது சீசன் நடந்தது. இதன் பைனலில் கத்தார், பஹ்ரைன் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 24-24 என சமநிலையில் இருந்தது. பின், கூடுதல் நேரத்தில் அசத்திய பஹ்ரைன் அணி 29-26 என வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றது. தவிர, 2027ல் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் குவைத் அணி 33-32 என, ஜப்பானை வீழ்த்தியது.
எக்ஸ்டிராஸ்
* 'டி-20' உலக கோப்பை தொடருக்கான ஐ.சி.சி., அம்பயர் குழுவில் இந்தியாவின் நிதின் மேனன், அனந்த பத்மநாபன், ஜெயராமன் மதனகோபால் இடம் பெற்றுள்ளனர். இதில் நிதின் மேனன், 4வது முறையாக (2021, 2022, 2024, 2026) 'டி-20' உலக கோப்பையில் அம்பயராக களமிறங்க உள்ளார். 'மேட்ச் ரெப்ரி' பட்டியலில் ஜவகல் ஸ்ரீநாத் இடம் பிடித்துள்ளார்.
* ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான சென்னை அணியில் பிரேசில் வீரர் எடுவார்டோ காவ் 27, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ், இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் பெண்களுக்கான 'அஸ்மிதா' தேசிய ரக்பி லீக் தொடர் இன்று துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இப்போட்டியில், 24 அணிகள் பங்கேற்கின்றன.
* நேபாளத்தில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் இன்று துவங்குகிறது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நேபாளத்தை சந்திக்கும் இந்தியா, அடுத்து வங்கதேசம் (பிப். 2), பூடானை (பிப். 4) எதிர்கொள்கிறது.
மேலும்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு