சந்தோஷ் டிராபி கால்பந்து காலிறுதியில் தமிழகம்
சிலபதார்: சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் காலிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 1-0 என, உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசன் நடக்கிறது. இதில் இறுதிச் சுற்றில் 12 அணிகள், இரு பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
அசாமில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், உத்தரகாண்ட் அணிகள் மோதின. உமாசங்கர் (68வது நிமிடம்) கைகொடுக்க தமிழக அணி 1-0 என வெற்றி பெற்றது.
அசாம்-மேற்கு வங்கம் அணிகள் மோதிய மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. ராஜஸ்தான்-நாகலாந்து அணிகள் மோதிய போட்டி 2-2 என 'டிரா'வில் முடிந்தது.
லீக் சுற்றின் முடிவில் 'ஏ' பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த மேற்கு வங்கம் (10 புள்ளி), தமிழகம் (7), ராஜஸ்தான் (6), அசாம் (5) அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
மேலும்
-
அஜித் பவாருக்கு கட்சி ஒன்று சேர வேண்டுமென்பதே...கடைசி ஆசை! மஹா., துணை முதல்வர் ஆகிறார் பவார் மனைவி?
-
தொழில் முடிவுகளை எடுப்பதில் துணை நின்றுள்ளது 'தினமலர்'
-
நாடு முழுதும் பள்ளி மாணவியருக்கு இலவச நாப்கின்!... உச்ச நீதிமன்றம் உத்தரவு
-
சொந்த மண்ணில் சாதிப்பாரா சாம்சன்: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
-
பைனலில் ஜோகோவிச்-அல்காரஸ்: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
-
மும்பை அணிக்கு 5வது தோல்வி: 'எலிமினேட்டர்' போட்டிக்கு குஜராத் தகுதி