நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,800 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 30) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 4800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து, புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 28) ஆபரண தங்கம் கிராம் 15,610 ரூபாய்க்கும், சவரன் 1,24,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜனவரி 29), தங்கம் விலை கிராமுக்கு 1,190 ரூபாய் அதிகரித்து, 16,800 ரூபாயாக விற்பனையானது. சவரனுக்கு, 9,520 ரூபாய் உயர்ந்து, 1,34,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 425 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 25,000 ரூபாய் உயர்ந்து, 4.25 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜனவரி 30) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 4800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 16,200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சவரனுக்கு நேற்று 9,520 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு 4800 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 415 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு நேற்று 25 ஆயிரம் ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று 10 ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சந்தையில் டாலர் மதிப்பு ஏறியதால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. நேத்திக்கு நான் இதை பதிவிட்ட போது ஒரு தத்தி எனக்கு டாஸ்மாக் அறிவுன்னு பதில் போட்டுது.
நல்ல முதலீடு தான். ஆனால் வீட்டு அம்மணிகிட்ட போனா திரும்ப வராதே.
கூடியதிலிருந்து இரண்டில் ஒரு பங்கு குறைந்திருப்பது முக்கியமல்ல
தங்க விலை கூடும்போது அதிகமாக கூடுகிறது... குறையும் போது கம்மியாக குறைகிறதுமேலும்
-
அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
-
திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் பயன்படுத்தி ரூ.250 கோடி ஊழல்; சிபிஐ குற்றப்பத்திரிகை
-
வெடிகுண்டு மிரட்டல்; ஆமதாபாத்தில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
-
திருடப்பட்ட சோழர் கால சிலைகள்; இந்தியாவிடம் ஒப்படைக்கிறது அமெரிக்கா
-
பிப்ரவரி 5ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்
-
திமுகவை வெளியேற்றி தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்