திமுகவை வெளியேற்றி தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
சென்னை: திமுகவை வெளியேற்றி, தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திமுக ஆட்சியில் தினந்தினம் சீரழியும் சட்டம் ஒழுங்கு. கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தில் நட்டநடு சாலையில் வைத்து 70 வயதான விவசாயி ஒருவரை மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்னும் வார்த்தை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா? அல்லது ஒட்டுமொத்தமாக சமாதி கட்டப்பட்டுவிட்டதா? தலைநகரிலும் பாதுகாப்பில்லை. கிராமத்திலும் பாதுகாப்பில்லை. பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை. வயதான முதியவருக்கும் பாதுகாப்பில்லை.
வீட்டிலும் பாதுகாப்பில்லை. சாலையிலும் பாதுகாப்பில்லை. இத்தகைய கொடூர ஆட்சியை மீண்டுமொரு முறை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து, மீண்டும் ஒரு நரக வேதனையை மக்கள் அனுபவிக்கத் தயாராக இல்லை.திமுகவை வெளியேற்றி, தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு