ஈரானை நோக்கி பயணிக்கும் அதிநவீன போர்க்கப்பல்கள்: டிரம்ப் தகவல்

8


வாஷிங்டன்: ஈரானை நோக்கி மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா உடன் பிரிட்டன் வர்த்தக உறவு கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது. கனடா சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது இன்னும் ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன். கனடா சிறப்பாகச் செயல்படவில்லை.


அவர்கள் மிகவும் மோசமாகச் செயல்படுகிறார்கள். சீனாவை ஒரு தீர்வாகப் பார்க்க முடியாது. எனக்கு சீனாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அதிபர் ஜி ஜின்பிங் என் நண்பர் என்பது எனக்குத் தெரியும். அவரை எனக்கு நன்றாகத் தெரியும்.


ஈரானை நோக்கி மிகவும் சக்திவாய்ந்த போர் கப்பல்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை நாங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்தால் அது நன்றாக இருக்கும். நான் அவர்களிடம் இரண்டு விஷயங்களைச் சொன்னேன். முதலாவதாக, அணு ஆயுதம் கூடாது.


இரண்டாவதாக, போராட்டக்காரர்களைக் கொல்வதை நிறுத்துங்கள். அவர்கள் ஆயிரக்கணக்கில் மக்களைக் கொல்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் 837 தூக்குத் தண்டனைகளை நிறுத்தினேன். ஆனால் அவர்கள் ஏதேனும் செய்தே ஆக வேண்டும். இது போன்ற ஒரு சம்பவத்தை யாரும் பார்த்ததில்லை.இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement