டில்லி காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, சிபிஆர் மரியாதை
புதுடில்லி: மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினமான இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினர்.
சிபிஆர் புகழாரம்
இது குறித்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை மற்றும் தன்னலமற்ற சேவையின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் மனிதகுலத்தை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.
நீதி, நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கிய சமூகத்தைப் பின்தொடர்வதில் அவரது நீடித்த மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இவ்வாறு சி.பி.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மரியாதை
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கிண்டியில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் ரவி மரியாதை செலுத்தினார்.
@block_P@
முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மதவெறியை மாய்ப்போம், மகாத்மாவைப் போற்றுவோம். அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார். மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.block_P
மகாத்மா காந்திக்கு மரியாதைமேலும்
-
அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
-
திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் பயன்படுத்தி ரூ.250 கோடி ஊழல்; சிபிஐ குற்றப்பத்திரிகை
-
வெடிகுண்டு மிரட்டல்; ஆமதாபாத்தில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
-
திருடப்பட்ட சோழர் கால சிலைகள்; இந்தியாவிடம் ஒப்படைக்கிறது அமெரிக்கா
-
பிப்ரவரி 5ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்
-
திமுகவை வெளியேற்றி தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்