தொழிலில் உள்ள சவால்களை முதலில் சொல்லி தருகிறேன்!
துணியில் பொம்மைகள் செய்வதுடன், அதற்கான பயிற்சி வகுப்பும் எடுத்து வரும், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த, 49 வயதான நிஷா ஸ்ரீகாந்த்: நான் பிறந்து வளர்ந்தது, கேரள மாநிலம், திருவனந்தபுரம். உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் முதுகலை மேலாண்மை படிப்பு முடித்தபின், திருமணம் முடிந்து சென்னை வந்தேன். சென்னையிலேயே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிகாரமிக்க தலைமை பொறுப்பும், லட்சங்களில் சம்பள மும் கிடைத்தன.
என் பாட்டி, துணியிலேயே அழகாக பொம்மைகள் செய்வார். பாட்டியை பார்த்து வளர்ந்ததால், நானும் பழைய துணிகள், அட்டை பெட்டி, செய்தித் தாள் என எது கிடைத்தாலும், அதில் பொம்மைகள் செய்வேன்.
வளர்ந்த பின்னும் அவ்வப்போது பொழுதுபோக்கிற்கு பொம்மைகள் செய்து நண்பர்கள், உறவினர்கள் பிறந்த நாள், திருமணங்களுக்கு பரிசளித்தேன்.
என் சகோதரி மகளின் திருமணம், 2017ல் நடந்தது. திருமணத்தில் என்னவெல்லாம் சடங்குகள் நடக்குமோ, அந்த நிகழ்வுகள் அனைத்தையும் பல்வேறு பொம்மைகளாக செய்து காட்சிப்படுத்தினேன். வித்தியாசமாக இருந்ததால், பொம்மைகள் அனைவரின் கவனத்தை யும் ஈர்த்தன.
அங்கு சமையல் ஒப்பந்ததாரராக வந்திருந்தவர், 'இந்த பொம்மைகளை எனக்கு விலைக்கு கொடுத்து விடுங்கள்' என்று கேட்டார். அதுதான், பொம்மை தயாரிப்பில் என் முதல் வருமானம்.
என் அக்கா, 'நீ ஏன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பொம்மை தயாரிப்பில் முழுநேரமாக இறங்கக்கூடாது' என்று கேட்டார். வேலையை விட்டு விட்டு, நங்கநல்லுாரில், 100 சதுர அடியில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தொழில் துவங்கினேன்.
வரலட்சுமி நோன்பு, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினங்கள் என்று வரிசையாக பண்டிகைகள் வந்தன. ஆர்டர்கள் குவிந்ததால், மேலும் நான்கு பேரை உதவிக்கு சேர்த்துக் கொண்டேன்.
படிப்படியாக விரிவுபடுத்தி, இப்போது ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறேன்; 20 சதவீதம் லாபமும் கிடைத்து வருகிறது. ஆரம்பத்தில், பொம்மையின் முகம் செய்வதில் நிறைய தடுமாற்றங்கள் இருந்தன. 2019ல் கொரோனா வந்து, பல ஆர்டர்கள் பறிபோயின. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது பெரும் சவாலாகி விட்டது.
ஆரம்பகட்ட சவால்களை கடந்து வந்தபோது, பலரும், 'எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்' என்று கேட்டனர். அப்படித்தான் 'ஸ்ரீகோலாபுரி ஸ்கூல் ஆப் டால் மேக்கிங்' என்று ஆரம்பித்து வகுப்புகள் எடுக்கிறேன்.
என்னுடைய மாணவர்களுக்கு, 'தொழில் என்பது ஒரு ஆபத்தான விளையாட்டு, புத்திசாலித்தனமாக திட்டமிட்டு, சொந்த தொழிலால் பலர் உச்சத்துக்கும் சென்றிருக்கின்றனர். பலர் எல்லாவற்றையும் இழந்தும் இருக்கின்றனர். எனவே, விற்பனை உள்ளிட்ட நடைமுறை அறிவு முக்கியம்...' என்று, இந்த தொழிலில் உள்ள சவால்களைத்தான் முதலில் சொல்லி தருகிறேன்.
தொடர்புக்கு
95518 32000
மேலும்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு