கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை திருப்பி தர அமெரிக்கா சம்மதம்

1

சென்னை: தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட, சோமாஸ்கந்தர் வெண்கல சிலை உட்பட மூன்று சிலைகளை ஒப்படைக்க, அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


திருவாரூர் மாவட்டம் ஆலத்துாரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில், சிவன், பார்வதி ஆகியோருடன், முருகன் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தர் சிலையை, மர்ம நபர்கள் சில ஆண்டுகளுக்கு முன் திருடிச் சென்றனர். இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், துப்பு துலக்க முடியவில்லை.


கடந்த 2022ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி.,யாக இருந்த ஜெயந்த் முரளி தலைமையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், முருகன் சிலை அகற்றப்பட்ட நிலையில், சிவன், பார்வதி தேவி வெண்கல சிலை இருப்பது தெரிய வந்தது.



அதைத் தொடர்ந்து, அந்த சிலை தொடர்பான ஆவணங்களை, அமெரிக்க அரசிடம் ஒப்படைத்து, அவை தமிழகத்தின் கோவிலில் இருந்து திருடிச் செல்லப்பட்டதை, தமிழக போலீசார் நிருபித்தனர்.


அதைத்தொடர்ந்து, சிலை மட்டுமின்றி சோமாஸ்கந்தர், சுந்தர மூர்த்தி நாயனார், பரவை நாச்சியார் மற்றும் சிவ நடராஜர் சிலைகளை ஒப்படக்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Advertisement