ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
உடுமலை: உடுமலை ஜல்லிபட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது.
உடுமலை தளி ஜல்லிபட்டியிலுள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷக விழா, நேற்று துவங்கியது. விக்னேஸ்வர பூஜை, சங்கடஹர கணபதி ேஹாமம் உள்ளிட்ட ேஹாமங்கள் நடைபெற்றது. இரவு, தேவராட்டம் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, திருமூர்த்திமலையிலிருந்து கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் விநாயகர் சன்னதியிலிருந்து, தீர்த்தம் மற்றும் முளைப்பாலிகை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இன்று, (31ம் தேதி) காலை, 7:30 மணிக்கு மேல், 11:00 மணிக்குள் மங்கள இசை, வேதபாராயணம், மண்டப ஆராதனை, வேதிகை பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை துவங்குகிறது.
பகல், 12:00 மணிக்கு விமான கலசம் வைத்தல், மாலை, 5:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம், மூன்றாம் கால யாக பூஜைகள் துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, பவளக்கொடி மற்றும் வள்ளி கும்மியாட்டம் கோவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நாளை (பிப்., 1ம் தேதி) காலை, 5:30 மணிக்கு மேல், 8:00 மணிக்குள் நான்காம் கால யாகம், காலை, 8:15 மணிக்கு யாத்ரா தானம், யாக சாலையில் இருந்து கும்பங்கள் புறப்படுதல், காலை, 9:29 மணிக்குள் விமான கோபுர கும்பாபிேஷகம், சக்தி மாரியம்மன் மூல மூர்த்தி கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.
காலை, 9:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாகமிட்டி, ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு
-
பொதுக்கூட்ட வழிகாட்டு விதிமுறைகள்; எதிர்த்து தவெக வழக்கு