பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றாததால் தொடரும் நெரிசல்
உடுமலை: உடுமலையில் பிரதான ரோடான ராஜேந்திரா ரோட்டில், காணப்படும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் பாதிக்கின்றனர்.
உடுமலையில், பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, கல்பனா ரோடு போன்ற முக்கிய ரோடுகள் அமைந்துள்ளன. இவற்றில் ராஜேந்திரா ரோடு போக்குவரத்து நிறைந்த ரோடாக உள்ளது.
இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் உள்ளன. பல்வேறு பகுதிகளுக்கு இந்த ரோடு வழியாக மக்கள் செல்கின்றனர். இதனால், வாகன போக்குவரத்து மிகுந்து இருக்கும்.
மேலும் இந்த ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சந்தை நாட்களில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால், வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
எனவே, நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு
-
பொதுக்கூட்ட வழிகாட்டு விதிமுறைகள்; எதிர்த்து தவெக வழக்கு