தனியார் கல்லுாரி மாணவர்கள் 1,433 பேருக்கு லேப்டாப் வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தனியார் கல்லுாரியில் பயிலும் 1,433 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி பேசியதாவது;

கல்லுாரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக, உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் கல்லுாரியில் பயிலும் 1,433 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாட புத்தகங்களில் உள்ள தகவல்களை மட்டும் படிக்காமல், ஆன்லைனில் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டு கல்வியையும், திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும். அனைத்து துறைகளிலும் ஏ.ஐ., புரட்சி செய்து வருகிறது. ஏ.ஐ., படிப்பில் நாட்டம் செலுத்த வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், இ சேவை மைய மேலாளர்கள் கலைமணி, கார்த்திக் உட்பட அரசு அலுவலர்கள், கல்லுாரி நிர்வாகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement