பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி அரசு டாக்டர் கைது
அரியாங்குப்பம்: மனையை கிரைம் செய்து தருவதாக கூறி, சுகாதார நிலைய பெண் உதவியாளரிடம் 1 கோடி பணம் மற்றும் 6 சவரன் நகை மோசடி செய்த, அரசு டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் அகத்தியர் நகர், அன்னை தெரேசா தெருவை சேர்ந்தவர் சகாயலுார்துசாமி மனைவி ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி, 48; இவர், அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணி செய்து வருகிறார்.
இவரின் உறவினரான கடலுார், கோண்டூரை சேர்ந்தவர் ஜவகர் கென்னடி, 56; இவர், புதுச்சேரி அரசு மருத்துமனையில் டாக்டராக, பணி செய்தார்.இந்நிலையில், டாக்டர் தனது குடும்ப சூழ்நிலைக்கு, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியிடம், 6 சவரன் தங்க நகையை வாங்கினார்.
மேலும், ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியின் உறவினரான மூலக்குளத்தை சேர்ந்த சவரியம்மாளுக்கு, காலி மனையை கிரைம் செய்வதாக முடிவு செய்து, 1 கோடி ரூபாயை, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி மூலம், இவரது வங்கி கணக்கு வழியாக, டாக்டருக்கு அனுப்பினார்.
அதையடுத்து, அந்த இடத்தை கிரைம் செய்து கொடுக்காமல், பணம் மற்றும் நகையை ஏமாற்றிய டாக்டர் மீது ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி, அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து, டாக்டர் ஜவகர் கென்னடியை, 56; நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 17 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றி, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு
-
பொதுக்கூட்ட வழிகாட்டு விதிமுறைகள்; எதிர்த்து தவெக வழக்கு