கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு, மாநில உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

மாவட்ட இணை செயலாளர் மணி, வட்ட தலைவர் தனபால், செயலாளர் ஞானபிரகாஷ், பொருளாளர் சாதிக்பாஷா, துணை தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் குடிநீர், கழிவறை மற்றும் இணையதள வசதி ஏற்படுத்தி நவீனமயமாக்கம் செய்தல், வி.ஏ.ஓ., கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி நேற்று 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.

வட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன், வட்ட அமைப்பு செயலாளர் செந்தாமரை மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அதேபோல், மாவட்டத்தில் மற்ற 6 தாலுகா அலுவலகத்திலும் வி.ஏ.ஓ.க்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

Advertisement