கள்ளக்குறிச்சியில் பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி பெருவங்கூர் சாலை சங்கரலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் நேற்று பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமி மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், கமலா நேரு தெரு, நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர், பல்லகச்சேரி ராமநாதீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
அதேபோல் தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு
-
பொதுக்கூட்ட வழிகாட்டு விதிமுறைகள்; எதிர்த்து தவெக வழக்கு