வார இறுதி நாள் தங்கம் விலை முதல் ஐந்தாவது டி 20 கிரிக்கெட் போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜன.,31)!

நமது நிருபர்




தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (ஜனவரி 31) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?


அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.


* காரைக்குடியில் 2560 கோடி ரூபாயில் முடிவுற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்குகிறார். அரசு சட்டக்கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

* சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று தைலாபுரத்தில் காலை 10 மணிக்கு ராமதாஸ் தரப்பு நேர்காணல் நடை பெறுகிறது.



* சர்வதேச முதலீட்டாளர்களும், பல நாடுகளும், தங்கம், வெள்ளியில் அதிகளவில் முதலீடுகள் செய்வதால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் தினமும் புதிய உச்சத்தை எட்டி வந்தன. நேற்று வெள்ளி கிலோவுக்கு 20,000 ரூபாயும், ஆபரண தங்கம் சவரனுக்கு 7,600 ரூபாயும் குறைந்தது.


இன்று வார இறுதி நாளில், தங்கத்தின் விலை சவரனுக்கு 7600 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 950 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 14,900க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 15,200 ரூபாய் சரிவடைந்துள்ளது.


* ஐந்தாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி நடக்கின்றன.உள்ளூர் 'ஹீரோ' சஞ்சு சாம்சன் விளாசினால், இந்திய அணி சுலப வெற்றி பெற்று, தொடரை 4-1 என கைப்பற்றலாம்.



* மூன்றாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்ரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 9.30 மணிக்கு ஜோகனஸ்பர்க்கில் போட்டி நடக்கின்றன.
* தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டன் அரையிறுதி போட்டி இன்று காலை 10.30மணிக்கு பாங்காக்கில் நடக்கிறது. இதனை கண்டு மகிழ ஏரளாமான பாட்மின்டன் போட்டி பிரியர்கள் பிரியத்துடன் காத்திருக்கின்றனர்.

Advertisement