நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் நிறைந்த அரசியல் ஆவணம்: கேரள பட்ஜெட் குறித்து பாஜ., விமர்சனம்
திருவனந்தபுரம்:கேரளப் பட்ஜெட் வெறும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் நிறைந்த அரசியல் ஆவணம் என்று மாநில பாஜ தலைவர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.
கேரளவில் இந்தாண்டுக்கான(2026) பட்ஜெட் ஜனவரி 29 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கேரள பாஜ தலைவர் ராஜீவ் சந்திரசேகர், மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கேரள பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கிறது, வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் நிறைந்த அரசியல் ஆவணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:
மாநிலத்தின் கடன் ரூ.5.5 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில், ஒரு திட்டத்தின் நிதியை மற்றொரு திட்டத்திற்கு திருப்பி அரசு சமாளித்து வருகிறது.
கேரளாவின் வருவாயில் 92சதவீதம் கடன் வட்டி மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவிடப்படுவதாகவும், வெறும் 8 சதவீதம் மட்டுமே வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலி கஜானாவை வைத்துக்கொண்டு பெரிய அறிவிப்புகளை அரசு வெளியிடுகிறது, முந்தைய பட்ஜெட் வாக்குறுதிகளில் 75 சதவீதம் இன்னும் காகிதத்திலேயே உள்ளது.ஜல் ஜீவன் மிஷன் போன்ற மத்திய அரசின் திட்டங்களைத் தனது திட்டங்களாக மாநில அரசு காட்டிக்கொள்வதாகவும், அதேசமயம் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களைச் சரியாக அமல்படுத்தவில்லை.
இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் வாலிபர் கைது; தீவிர விசாரணை
-
ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்; தற்காலிகமாக ஒத்திவைப்பு
-
தொடர்ச்சியான முதலீடுகளால் அனைத்துப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சி: துணை ஜனாதிபதிசி.பி. ராதாகிருஷ்ணன்
-
ரிபாகினா புதிய சாம்பியன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலக்கல்
-
வாஷிங்டன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்
-
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ்-அரவிந்த் 'டிரா'