மாலையில் மளமளவென சரிந்தது வெள்ளி; ஒரே நாளில் ரூ.85 ஆயிரம் சரிவு
சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 31) காலை வெள்ளி கிலோவுக்கு 55 ஆயிரம் ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் 30 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்களும், பல நாடுகளும், தங்கம், வெள்ளியில் அதிகளவில் முதலீடுகள் செய்வதால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் தினமும் புதிய உச்சத்தை எட்டி வந்தன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 29)ஆபரண தங்கம் கிராம் 16,800 ரூபாய்க்கும், சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 425 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜனவரி 30) காலை தங்கம் விலை கிராமுக்கு 600 ரூபாய் குறைந்து, 16,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 4,800 ரூபாய் சரிவடைந்து, ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 415 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 350 ரூபாய் சரிவடைந்து, 15,850 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 2,800 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 800 ரூபாய்க்கு ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் சரிவடைந்து, 405 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று வெள்ளி கிலோவுக்கு 20,000 ரூபாயும், தங்கம் சவரனுக்கு 7,600 ரூபாயும் சரிவடைந்தது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜனவரி 31) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 7,600 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 950 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 14,900க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 15,200 ரூபாய் சரிவடைந்தது. அதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு 55 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 350 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 55 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு கிலோ 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
மாலையில் வெள்ளி...
இந்த நிலையில், இன்று மாலை வெள்ளி விலை மட்டும் மீண்டும் சரிந்துள்ளது. காலையில் கிலோவுக்கு 55 ஆயிரம் ரூபாய் சரிந்திருந்த வெள்ளி, மாலையில் மீண்டும் 30 ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது. இதன் மூலம், ஒரே நாளில் 85 ஆயிரம் சரிந்து, ஒரு கிலோ 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் வெள்ளி விலை கிராமுக்கு 105 ரூபாயும், கிலோவுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயும் சரிவடைந்துள்ளது. மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
Oru kai manna vaari thaan vidiyal aatchiyil podanum avvalavu Rasi
இன்று ஒரு காணொளி பார்த்தேன். அதில் நமது சபாநாயகர் அப்பாவு அவர்கள் தங்கம் விலை ஏறுவதற்கு மோடி அரசுதான் காரணம் என்று மிகவும் அறிவுபூர்வமாக பேசிக்கொண்டிருந்தார். இப்போது இவ்வளவு இறங்குவதற்கும் மோடி அவர்கள்தான் காரணம் என்று சொல்வாரா? அமெரிக்க மத்திய வங்கியில் ஸ்டெப்பான் மீரான் என்ற புதிதாக நியமிக்கப்பட்ட அவ்வங்கியின் தலைவரால் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் அமெரிக்க பத்திரங்களில் செய்யப்படுவதால் தங்கத்தின் விலை உலக சந்தையில் திடீரென இறங்கியுள்ளது. அப்பாவு போன்ற அறிவு ஜீவிகளினாலேதான் பெரியாரின் பெயர் ஓங்குகிறது.மேலும்
-
இஸ்ரேல் ஊதும் மகுடிக்கு ஆடும் பாம்பு டிரம்ப்; எப்ஸ்டீன் அறிக்கையில் புதுகுண்டு
-
தலைகுனிந்து நிற்கும் தமிழகம்.. வாய் சவடால் பேசும் ஸ்டாலினுக்கு கண்டனம்;இபிஎஸ்
-
வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அரசு அழிந்து போவது உறுதி; அமித்ஷா
-
மஹாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றார் சுனேத்ரா பவார்
-
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் நிறைந்த அரசியல் ஆவணம்: கேரள பட்ஜெட் குறித்து பாஜ., விமர்சனம்
-
அஜித் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவியா? தெரியாதே என்கிறார் சரத்பவார்