மஹாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றார் சுனேத்ரா பவார்

4


மும்பை: மறைந்த அஜித்பவார் மனைவியும், ராஜ்யசபா உறுப்பினரான சுனேத்ரா பவார், மஹாராஷ்டிரா துணை முதல்வராக இன்று ஜன.,31ல் பதவியேற்றார்.


Tamil News
Tamil News
@1brகடந்த ஜனவரி 28 அன்று பாராமதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்பவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், துணை முதல்வர் பதவியிடடத்தை அவரது மனைவியை கொண்டு நிரப்ப கட்சியினர் முடிவு செய்தனர்.

இதன்படி தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சுனேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டார். மும்பை விதான் பவனில் நடந்த கட்சி கூட்டத்தில், மூத்த தலைவர் திலீப் வால்சே பாட்டீல் இவரது பெயரை முன்மொழிய, சகன் புஜ்பால் அதனை வழிமொழிந்தார். இந்த முடிவுக்கு பாஜ., மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) உள்ளிட்ட மஹாயுதி கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து சுனேத்ரா பவார் மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சுனேத்ரா பவார், அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமெனில், அடுத்த 6 மாதங்களுக்குள் மஹாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ அல்லது எம்எல்சி) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வாழ்த்து



மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுனேத்ரா பவாருக்கு வாழ்த்துகள். மறைந்த அஜித் பவாரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும், மாநில மக்களின் நலனுக்காகவும் அவர், அயராது உழைப்பார் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement