அஜித் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவியா? தெரியாதே என்கிறார் சரத்பவார்
மும்பை: அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு மஹாராஷ்ரா துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதா என்ற கேள்விக்கு, ''எனக்கு ஏதுவும் தெரியாது. என்னிடம் ஏதும் ஆலோசிக்கப்பட வில்லை'' என சரத்பவார் பதில் அளித்துள்ளார்.
மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், 66, விமான விபத்தில் உயிரிழந்த நிலையில், பிளவுபட்ட தேசியவாத காங்., இணைய வேண்டும் என்பதே அவரது கடைசி விருப்பமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு பிரிவுகளின் இணைப்பு விழா, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடக்கவுள்ளதாகவும், துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு சரத்பவார் அளித்த பதில்: அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுவதாக கூறுவது பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. அவருடைய கட்சி முடிவு செய்திருக்க வேண்டும்.
இன்று செய்தித்தாளில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். பிரபுல் படேல் மற்றும் சுனில் தடாகரே போன்ற சிலர் முடிவுகளை எடுக்க முன்முயற்சி எடுத்துள்ளனர். இது குறித்து என்னிடம் ஏதும் ஆலோசிக்கப்பட வில்லை. பிளவுபட்ட தேசியவாத காங்., இணைய வேண்டும் என்ற அஜித்பவார் விருப்பம் தற்போது நிறைவேற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
அஜித் பவார், சஷிகாந்த் ஷிண்டே மற்றும் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் இரு பிரிவுகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். இணைப்பு விழா தேதி கூட நிர்ணயிக்கப்பட்டது. அது பிப்ரவரி 12ம் தேதியில் திட்டமிடப்பட்டு இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அஜித் பவார் அதற்கு முன்பே எங்களை விட்டு சென்றுவிட்டார். இவ்வாறு சரத்பவார் கூறினார்.
என்னிடம் ஆலோசிக்க வில்லை என்பது சரி தெரியவில்லை என கூறுவது நம்பும் படியாக இல்லையே. இவர் இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவர். கூடா நட்பு கேடாய் முடிந்தது
இப்போதைக்கு இவருக்கு இருக்கும் ஒரே கவலை தன் மகள் சுப்ரியாவை ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கி நிம்மதியாக ஓய்வு எடுப்பதுதான்.. ஆனால் பாஜக அவ்ளோ சீக்கிரம் இவர் குடும்பத்தை உள்ளே விடாது..
வாரிசு அரசியல் நல்லதல்ல
இவர் தெரிந்து என்ன பண்ணப்போகிறார்?
எதற்கு ஆலோசனை?மேலும்
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் வாலிபர் கைது; தீவிர விசாரணை
-
ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்; தற்காலிகமாக ஒத்திவைப்பு
-
தொடர்ச்சியான முதலீடுகளால் அனைத்துப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சி: துணை ஜனாதிபதிசி.பி. ராதாகிருஷ்ணன்
-
ரிபாகினா புதிய சாம்பியன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலக்கல்
-
வாஷிங்டன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்
-
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ்-அரவிந்த் 'டிரா'