பிரதமர் மோடியுடன் அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு சந்திப்பு

1


புதுடில்லி:டில்லியில் உள்ள தனது இல்லத்தில் அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜனவரி 31) சந்தித்துப் பேசினார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற 2வது இந்தியா- அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு அமைந்தது. அரபு லீக்கின் 22 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

அமைச்சர்கள் குழு சந்திப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட முக்கிய அம்சங்கள்:



இந்தியாவிற்கும், அரபு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான வரலாற்று மற்றும் மக்கள் ரீதியிலான தொடர்புகள் பகிரப்பட்டது.
மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அரபு லீக் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் ஆதரவு உறுதிபடுத்தப்பட்டது. மேலும், சர்வதேச அமைதி முயற்சிகள் மற்றும் காசா அமைதித் திட்டத்திற்கு வரவேற்பு.
எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


2011ம் ஆண்டுக்குப் பிறகு லிபிய வெளியுறவு அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.

பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தலைமையில் முறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

Advertisement