ஈரானுடன் ஒப்பந்தம்; டிரம்ப் நம்பிக்கை

4

வாஷிங்டன்: ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பிரச்னைகள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த டிசம்பர் முதல் அங்கு போராட்டம் நடந்து வருகிறது. பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், போர்க்கப்பல்களை ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமேனி, '' அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால், ஈரான் அமைதியாக இருக்காது. இந்த முறை மிகப் பெரிய அளவிலான போராக மாறிவிடும். சண்டையை துவக்கினால், இந்த முறை பிராந்திய அளவில் மிகப் பெரிய அளவுக்கு போர் வெடிக்கும் என அமெரிக்கர்களுக்கு நன்கு தெரியும்'' என எச்சரித்து இருந்தார்.



இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறி இருப்பதாவது: உலகின் மிகப்பெரிய, மிகவும் அதிநவீன கப்பல்கள் எங்களிடம் உள்ளன. இன்னும் சில நாட்களில் ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ளவில்லை என்றால், ஈரானின் கமேனி எச்சரிக்கை விடுத்து இருப்பது சரியானதா என்பது தெளிவாகிவிடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Advertisement