பார்லிமென்டில் இன்று ஜனாதிபதி உரை மீதான விவாதம்; பிப்ரவரி 4ல் பிரதமர் மோடி உரை

5

நமது நிருபர்



ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (பிப்ரவரி 02) லோக்சபாவில் தொடங்குகிறது.


ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், கடந்த 28ல், பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் பெரிதாக இடம்பெறவில்லை.



இந்நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (பிப்ரவரி 02) லோக்சபாவில் தொடங்குகிறது. இந்த விவாதத்திற்காக மொத்தம் 18 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் பாஜ., சார்பில் விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்த விவாதத்திற்காக மொத்தம் 18 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பிப்ரவரி 4ம் தேதி பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement