ஜெயில் டூ பெயில்; பெயில் டூ ஜெயில் தி.மு.க., கூட்டணியை விமர்சித்த சுதாகர்ரெட்டி

மதுரை: ''தி.மு.க., - காங்., கட்சிகள் ஜெயில் டூ பெயில், பெயில் டூ ஜெயில்' என உள்ளன என்று தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியின் தோல்வி உறுதியாகிவிட்டதால் அ.தி.மு.க., --- பா.ஜ., கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என போலி சர்வேக்கள் வெளியிடப்படுகின்றன. தமிழக மக்கள் தி.மு.க., மீது கோபத்துடன் உள்ளனர்.

அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தி.மு.க., காங்., கட்சிகள் ஜெயில் டூ பெயில், பெயில் டூ ஜெயில் என உள்ளன.

பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தே.ஜ., கூட்டணிக்கு வர வேண்டும் என வரவேற்கிறேன். கூட்டணிக்கு வருவோரை பிரதமர் மோடியும், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியும் வரவேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement