இந்தியாவை இழிவுபடுத்த வேண்டாம் ; ராகுலை எச்சரிக்கும் கிரண் ரிஜிஜூ
புதுடில்லி: 'நம் நாட்டை இழிவுபடுத்த வேண்டாம். ஒரு பெருமைமிக்க இந்தியராக இருங்கள்' என்று காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
2026-27ம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட பட்ஜெட் என்று கூறி பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாராட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ராகுலும் தனது பங்கிற்கு சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தியாவின் உண்மையான நெருக்கடிகள் அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், உற்பத்தித்துறை சரிவடைந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உலகின் முன்னணி தொழிலதிபரின் கருத்தை மேற்கோள் காட்டி, பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; பொதுவாக நான் இந்தியர்கள் அல்லாதவர்களின் அறிக்கைகளுக்கு எதிர்வினையாற்றியது கிடையாது. தற்போது ராகுலுக்கு உணர்த்துவதற்காகவே உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க்கின் கருத்தை மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது.
அரசை விமர்சிப்பது ஒரு ஜனநாயக உரிமை என்றாலும், நமது நாட்டை இழிவுபடுத்த வேண்டாம். இந்தியாவின் சாதனைகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒரு பெருமைமிக்க இந்தியராக இருங்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, உலகின் பொருளாதார பலம் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா - சீனாவை நோக்கி நகர்வதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை அடிப்படையாக வைத்து அவர் பகிர்ந்த பட்டியலில் 26.6 சதவீத ஜிடிபியுடன் சீனா முதலிடத்திலும், 17 சதவீத ஜிடிபியுடன் இந்தியா 2வது இடத்தில் இருந்தது. 9.9 சதவீத ஜிடிபியுடன் அமெரிக்கா 3ம் இடத்தை பிடித்திருந்தது.
ராகுல் போன்ற நபர்கள் நம் நாட்டின் பிரஜைகளா? தேசத்தை கொச்சைப் படுத்தும் இந்த அறிவிலியை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே காங்கிரசு செல்லாக் காசாகி விட்டது. இனி அக்கட்சி உருத்தெரியாமல் போவது உறுதி. இப்போதே இந்த நபரை பெரும்பாலானவர் ஒரு புழுவை போன்று பார்க்க தொடங்கிவிட்டனர்.
I m at a loss to understand why a person like rahul rajiv is considered as a human being and his reactions given undue importance
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப் படும் போது இந்திய அரசியலில் ஈடுபட தாய், தந்தையர் இருவரும் அன்றைய ஒருங்கிணைந்த இந்தியா அல்லது தற்போதைய இந்தியாவில் பிறந்தவர்களாக அல்லது தாய், தந்தையர் இந்தியாவில் பிறந்து வேறு நாட்டிற்கு புலம் பெயர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
என்ற விதியை கொண்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறான நபர்களுக்கு மட்டும்தான் தேசபக்தி, தாய்நாட்டின் மீதான பற்று இயற்கையாகவே அமையப் பெற்றிருக்கும்.
கிரண் அவர்களே நீங்கள் ஒரு பார்வையிழந்தவன் முன் அழகு ததும்பும் ஓவியத்தை காட்டுகிறீர்கள்
தேசியத்துக்கு எதிராக நடப்பவர்களை பத்திரிகையாளர்கள் புறக்கணிக்க வேண்டும்..
முதல் நபராக ராகுல் காந்தி
எப்பவுமே அடங்கவே மாட்டார்
ஸ்டாலின் ராகுல் இருவருமே மோடியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு நம் நாட்டையே எதிர்க்கிறார்கள். ஆக்க பூர்வமாக சிந்திக்க தெரியாமல் யாரோ எழுதித்தரும் சீட்டை படித்து தன்மானத்தை இழக்கிறார்கள்.
தன்மானத்தை விட தங்களுடைய முதல் குடும்ப கஜானாதான் முக்கியம் என்று நினைப்பவர்கள் இந்த அறிவீலிகள்
அவ.. உளறிக் கொண்டே இருப்ப.., நீங்களும் சும்மா வேடிக்கை பார்த்த படி இருப்பீங்களா. சாதாரண மனிதனாக பேசினால்
இனி கான் கிராஸ் இராகுலுக்கு பாஜக வின் இளைய தளபதிகள் பதில் சொன்னால் போதும். இராகுல், மைனோ, காக்கே போன்றவர்கள் அரசை தரம் தாழ்ந்து விமர்சித்தால் கைது நடவடிக்கை எடுக்கலாம். இவர்களின் பேச்சுக்கள் செயல்பாடுகள் .... பழமொழி போல் மட்டுமே உள்ளது.
பாபுவின் தாய்நாடு இத்தாலி தானே.... அதனால தான் நமது இந்திய நாட்டை பற்றி எப்போதும் குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.... பப்புவை திருத்த முடியாது.மேலும்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7600 குறைவு
-
அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம்: விஜய்
-
பார்லிமென்டில் இன்று ஜனாதிபதி உரை மீதான விவாதம்; பிப்ரவரி 4ல் பிரதமர் மோடி உரை
-
வங்கதேசத்தில் 12ம் தேதி பொதுத்தேர்தல்; இந்தியாவுக்கு அழைப்பு
-
மாரத்தானில் சாதிக்கும் அரண்மனை நகரத்து பெண்
-
உக்ரைனில் பஸ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி