விளையாட்டு சாதன தயாரிப்பு ஊக்குவிக்க ரூ.500 கோடி நிதி

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி துறைக்கு, முதன்முறையாக, அதிகபட்சம் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்துக்கான மொத்த ஒதுக்கீடு 4,480 கோடி ரூபாய். இது 2025-26ல் 3,346 கோடி ரூபாய் ஆக இருந்தது.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு 917 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இவ்வமைப்புக்கு 880 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

உயர் தரமும் கட்டுப்படியாகும் விலையும் கொண்ட விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவற்றின் தயாரிப்பு, ஆய்வு, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்காக தனி முன்னெடுப்பை துவங்க உள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் 'கேலோ இந்தியா' திட்டத்துக்கு பட்ஜெட்டில் 924.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இதன் ஒதுக்கீடு 1,000 கோடி ரூபாய் ஆகும். இருப்பினும் இறுதியில், 700 கோடி ரூபாய் அளவுக்கே செலவிடப்பட்டது.

Advertisement