துறைவாரியான அறிவிப்புகள்

துறைவாரியான அறிவிப்புகள்

தயாரிப்பு

* இந்திய செமிகண்டக்டர் இயக்கம் 2.0 செயல்படுத்தப்படும்

* பயோபார்மா தயாரிப்புக்கு ஷக்தி என்ற பெயரில் ஊக்கம்

* மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு திட்டம்

* ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி திட்டம்

* மூன்று ரசாயன பூங்காக்கள் அமைக்கப்படும்

* அரிய வகை காந்தங்கள், தாது திட்டத்தில் மாநிலங்கள் ஊக்குவிப்பு

* விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்புக்கு ஊக்கம்

* 200 பாரம்பரிய தொழில் கிளஸ்டர்கள் புதுப்பிப்பு

விவசாயம்

* 'தென்னை ஊக்குவிப்பு திட்டம்' துவங்கப்படும். மகசூல் கொடுக்காத தென்னை மரங்கள் அகற்றப்பட்டு, புதிய ரக தென்னங்கன்றுகள் நடவு செய்யப்படும்

* முந்திரி, கோகோ உற்பத்திக்கு தனித்திட்டம் உருவாக்கப்படும். ஏற்றுமதியில், 2030க்குள் உயர் ரக இந்திய பிராண்டு முந்திரி உற்பத்தி செய்ய திட்டம்

* உயர் மதிப்பு கொண்ட தென்னை, கோகோ, முந்திரி பயிர்களை கடலோரங்களில் வளர்க்க ஊக்குவிக்கப்படும்

* மலை பகுதிகளில் நட்ஸ், பாதாம், வால்நட் சாகுபடி ஊக்குவிக்கப்படும்

* உயர் மதிப்பு கொண்ட சந்தன மர உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் முறைகள் ஆகியவை மாநில அரசுகளோடு இணைந்து ஊக்குவிக்கப்படும்

 வால்நட், பாதாம், பைன் நட்ஸ் உற்பத்தியை பெருக்க அடர் நடவு முறை, அறுவடைக்கு பின் மதிப்பு கூட்டலுக்கு ஆதரவு வழங்கப்படும்

* ' பாரத் விஸ்தார்' என்ற பெயரில் அக்ரிஸ்டேக் தளங்கள் மற்றும் ஐ.சி.ஏ.ஆரின் விவசாய வழிமுறைகளை வழங்க, பன்மொழியில் ஏ.ஐ., கருவி உருவாக்கப்படும்.

சேவைகள்

* மருத்துவம் சார்ந்த சுற்றுலாவுக்கு ஐந்து மையங்கள்

* மருத்துவ கவனிப்புக்கு 1.50 லட்சம் பேருக்கு பயிற்சி

* மூன்று புதிய ஆயுர்வேத சிகிச்சை பயிற்சி மையங்கள் அமைப்பு

கல்வி

 புதிய தேசிய டிசைன் கல்வி நிறுவனம் உருவாக்கப்படும்

 மாவட்டந்தோறும் மகளிருக்கு விடுதி வசதி ஏற்படுத்தப்படும்

 தேசிய விருந்தோம்பல் கல்வி நிறுவனம் அமைக்கப்படும்

கால்நடை

 கடலோர பகுதிகளில் மீன் உற்பத்தி செயல்முறைகள் வலுவாக்கப்படும்

 கடன் இணைப்பு மானிய திட்டம், கால்நடை சார்ந்த உழவர் உற்பத்தியாளர்களின் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஊக்குவிக்கப்படும்.

நீர்வழி போக்குவரத்து

 ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், 500 நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்படும்.

 அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20 புதிய நீர்வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

எம்.எஸ்.எம்.இ.,

 சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிதிக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 சுயசார்பு இந்தியா நிதிக்கு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 எம்.எஸ்.எம்.இ., பொருள் விற்பனையில் தள்ளுபடிக்கு கடன் உத்தரவாதம்

கட்டமைப்பு

 கட்டமைப்பு அபாய உத்தரவாத நிதி உருவாக்கப்படும்

 புதிதாக 20 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்

 மாநிலங்களின் கட்டமைப்பு திட்டங்களுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய்

 கிழக்கு கடற்கரை தொழில் வழித்தடம் உருவாக்கப்படும்

Advertisement