பட்ஜெட்டில் தமிழகம்
பட்ஜெட்டில் தமிழகம்
* சென்னை- - பெங்களூரு, ஹைதராபாத் -- சென்னை அதிவேக பயணியர் ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.
* அகழ்வாராய்ச்சி தலமான ஆதிச்சநல்லுார், சுற்றுலா பயணிகளுக்காக திறந்துவிடப்படும். இதற்காக தனி நடைபாதை அமைக்கப்படும். பாதுகாப்பு ஆய்வகங்கள், விளக்க மையங்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உதவும் வகையில், நவீன கதை சொல்லும் திறனுடன் கூடிய தொழில் நுட்பங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்படும்.
* சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலையில் மலையேற்ற பயிற்சியாளர்களுக்கு வழித்தடம்.
* ஆர்வலர்கள் வசதியாக பறவைகளை காணும் வகையில், புலிக்காட் ஏரியில் (பழவேற்காடு) பறவைகள் கண்காணிப்பு பாதைகள் உருவாக்கப்படும்.
* கடந்த 2025ல் அரிய வகை காந்தங்களுக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, கனிம வளம் மிகுந்த தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இத்துறைக்காக பிரத்யேக வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
* இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், குறிப்பாக கோவில் நகரங்கள் மீது கவனம் செலுத்தப்படும். பல்வேறு வளர்ச்சி காரணிகளின் அடிப்படையில் நகர பொருளாதார மண்டலங்கள் வரையறுக்கப்படும். ஒரு மண்டலத்துக்கு ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை மேம்படுத்தப்படும். ராமேஸ்வரம், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பல கோவில் நகரங்களை கொண்ட தமிழகம், இதனால் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.